முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது யாராக இருந்தாலும் அதற்கு எதிரான போராட்டம் தொடரும்! -முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் ! கொரோனா வைரஸ் தாக்கிய முஸ்லிம் ஜனாஸாக்களை அரசினால் அடக்கம் செய்ய முடியாவிட்டால் எங்களிடம் தாருங்கள் என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறேன். நீங்கள் கூறப்போகும் உயிரியல் காரணங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாரில்லை. முஸ்லிம் ஜனாஸாக்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பள்ளிகளை உடைக்க வைத்து வாக்கு சேகரிக்க முயன்றதை போன்று இதையும் வைத்து வாக்கு சேகரிக்க முயலாமல் நாட்டினதும், முஸ்லிங்களினதும் நிலை கருதி இறைபக்தியுடன் செயற்படுங்கள் என தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கேட்டுக்கொண்டார். கிழக்குவாசலில் நேற்று (08) நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசிய அவர் முஸ்லிங்களின் ஜனாஸா எரிப்பு விடயங்கள் பற்றி கடும்தொனியில் பேசினார். தொடர்ந்த அவரது பேச்சில், இலங்கையில் வாழ்ந்த,வாழ்ந்துகொண்டிருக்கின்ற முஸ்லிங்களுக்கு காலத்திற்கு காலம் எழுகின்ற பிரச்சினைகள்...